Home தெனாலிராமன் காளியிடம் வரம் பெற்ற கதை

காளியிடம் வரம் பெற்ற கதை

12
0

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒருசிற்றூரில் ஓர் ஏழை அந்தண குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன்,இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தார்.

அதனால் அவனும்அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடையதாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்கு பள்ளிசென்று படிப்பது என்பது வேப்பங்காய் கசந்தது.

ஆனால் மிகவும்அறிவுக்கூர்மையும் நகைச்சுவையாக பேசக்கூடிய திறனும்இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத் தலைவர் இல்லாத காரணத்தால்குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது.அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.ஒரு நாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின்நிலையைக் கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்.

அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிக்சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளிகோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரம் நூற்றியெட்டுமுறை ஜபித்தால், காளி பிரசன்ன மறக்கவில்லை. இராமன் யோசித்தான்.

சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னதுஆயிரத்து எட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டுகாளியை ஜெபிக்கத் தொடங்கினேன்.இரவும் வந்து விட்டது, ஆனால் இராமன் காளி கோவிலை விட்டுஅகலவில்லை.

திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்,”என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கோபமாகக்கேட்டேன் காளி, அவளை வணங்கி எழுந்த ராமன் கைகளை கூப்பிதொழுதவாறே கேட்டான்.”தாயே நானோ வறுமையில் வாடுகிறேன்.

என் வறுமை அகலும் வழியும்எனக்கு நல் லறிவு தர வேண்டுகிறேன், காளி பெரிதாகச் சிரித்தாள்,” உனக்குப் பேராசை தான், கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?””ஆம் தாயே. புகழடைய கல்வி வேண்டும். வறுமை நீங்க பொருள்வேண்டும். இரண்டும் தந்து அருள் செய்ய வேண்டும்.” என்றான்ராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டுகன்னங்கள் பாலுடன் வந்தன. அந்த கிண்ணங்கள் இராமனிடம் தந்தாள்காளி.”இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும்விசேஷமானது.

வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒருகிண்ணத்தில் உள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும்தேவையோ அந்தக் கிண்ணத்தில் பாலை மட்டும் குடி.” என்றாள்புன்னகையுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here