யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
57

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

வைத்தியசாலைக்கு வருபவர்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஒன்றுகூடி கதைத்தல், ஒருவருக்கு அருகில் செல்லுதல் அல்லது அவ்வாறான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஒருவர் நோயாளியாக இருக்கின்ற போது ஒரு நாளில் ஒரு தடவை வந்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கிச் சென்றால் போதுமானதாக இருக்கும்.

இப்போது மருத்துவமனையில் இருக்கின்ற பிரிவுகள், தொலைபேசியூடாகக் கிடைக்கும் கோரிக்கைக்கு அமைவாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை கொழும்பிலிருந்து வந்தவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் பதற்றமடைய தேவையில்லை. எனினும் மிக அவதானமாக இருக்கவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here