அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்

0
34

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் மாதிரி திட்டமாக இது சில நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரசாங்கம் மற்றும் தனியார் ஆகிய இரண்டு தரப்பிற்கும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் பின்னடைவில்லாமல் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு வருகை தராமல் தொலைபேசி அழைப்புகளின் ஊடாக சேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தண்ணீர் , மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பின்னடைவில்லாமல் நடத்திச் செல்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here