இதை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடுங்க!… வாழ்நாள் முழுதும் நோயில்லாமல் இருக்கலாம்

0
64

ஏழைகளின் பாதாம் என்றழைக்கப்படும் நிலக்கடலையை தொடர்ச்சியாக உண்டு வந்தால் நம் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலை. நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான்.

இதன் தாய் நிலம் பிரேசில். அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்று பயிரிட்டனர். அப்படித்தான் இந்தியாவில் விருந்தாளியாய் வேர்விட்டது வளர்ந்தது வேர்க்க்கடலை.

100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரதம், ட்ரிப்டோபென், திரியோனின், ஐசோலூசின் போன்ற எண்ணற்ற சத்தும் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு கைப்பிடி அளவு இதனை சாப்பிட்டால் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here