அமெரிக்கர்களின் காக்கும் கடவுளாக மாறிய இந்திய பெண்! அவரை காண அடுத்தடுத்து நின்ற கார்கள்.

சென்ற இடமெல்லாம் இந்தியருக்கு சிறப்பு தான். இந்தக் கூற்றினை இன்னும் உண்மையாக்கும் வகையில், அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு இந்தியப் பெண்ணுக்கு பல அமெரிக்கர்கள், காரில் வரிசைகட்டி நின்று, நன்றியை தெரிவித்துள்ளனர். அந்த இந்தியப் பெண் யார்? எதற்காக பல அமெரிக்கர்கள் அந்தப் பெண்ணுக்கு இத்தனை மரியாதை கலந்த நன்றியை தெரிவிக்கிறார்கள்? என்பதை பற்றிய செய்தியை இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அந்த பெண்ணின் பெயர் உமா மதுசுதன். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பெண்மணி தான் இவர். தற்போது, அமெரிக்காவில் குடியுரிமைப்பெற்று அங்குள்ள சவுத் வின்ட்சோர் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்தப் பெண்ணிற்கு, பல கார்களில் வந்த அமெரிக்கர்கள், நன்றி சொல்லிய வீடியோ காட்சி தான், இன்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பெண் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வந்து நிற்கும் போது, பல கார்கள் வரிசையில் வரத்தொடங்கியது. அந்த கார்ருக்கு பின்னால், நூற்றுக்கணக்கான கார்கள் மட்டுமல்ல, சில காவல்துறை வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் இந்த பட்டியலில் அடங்கும். தொடர்ச்சியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தொடர்ந்து ஹாரன் சத்தத்தை எழுப்பி தங்களுடைய நன்றியை, அந்த மருத்துவ பெண்மணியிடம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் முதல் சென்ற கார் மட்டும் ஒரு நிமிடம் நின்று, அந்த பெண்ணிடம் உரையாடும் படியான காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்சமயம் உலகமே பயந்து நடுங்கி ஒடுங்கி நிற்க காரணமாக இருக்கும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு, மருத்துவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தில், இந்த பெண்மணியின் பங்கு அதிகமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வீடியோ காட்சியானது, பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனேகமாக அந்த காரில் செல்பவர்கள் இந்த பெண் மருத்துவரால், சிகிச்சை அடைந்து குணமானவர்கள் ஆக கூட இருக்கலாம். அதைப் பற்றிய முழு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அந்த பெண்ணிற்கு மரியாதை செலுத்த வந்த வாகனங்கள், ஊர்வலமாக வந்த, அந்த காட்சியானது சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் மீதமுள்ள கார்கள் பின் வரிசையில் நிற்கும் காட்சியும் அந்த வீடியோ பதிவின் மூலம் தெரியவருகிறது.

அமெரிக்காவில் இன்றைய நிலவரப்படி, அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று வரை 8,80,204 பேர் கொரானாவில் பாதிப்படைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம், 2,325 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான். இதுவரை அமெரிக்கா, தன் நாட்டு மக்களை 49,845 பேரை, குரானா வைரசுக்கு பலி கொடுத்துள்ளது என்பது மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயம். இந்த கொரானா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

இந்த வைரஸ் இன்னும் நமக்கு எத்தனை பாடங்களை தான் கற்றுத் தரப் போகிறது என்று தெரியவில்லை. தங்களது உயிரை பாதுகாத்த மருத்துவருக்கு, காரில் வரிசைகட்டி, நன்றி சொல்லும் அமெரிக்க மக்களின் எண்ணத்தை பார்த்து ஆச்சரியப்படுவதா? இல்லை, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு, பலியான மருத்துவரை அடக்கம் செய்வதற்கு சுடுகாட்டில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்களே!

இதை நினைத்து வருத்தப்படுவதா? எது எப்படியாக இருந்தாலும், நம் உயிரை காப்பது கடவுளாக இருந்தாலும், கடவுள் ரூபத்தில் இந்த பூமியில் வாழ்ந்து வருபவர்கள் மருத்துவர்களே! என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு, பாதிப்பு பரவாமல் இருக்க நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவேண்டும், என்ற கருத்தை முன்னிறுத்தி, நாமும் எல்லா மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

அந்த வீடியோ இதோ:

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...