கொழும்பில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு – பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி

0
46

கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் அடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருக்கு நடத்திய பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரின் உடல் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் வசித்த பிலியந்தலை , சித்தமுல்ல பகுதியில் சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

ஆனாலும் சுகாதார அமைச்சு அதனை உறுதிப்படுத்தாததுடன், தமது உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் 7 எனவே கூறப்பட்டிருக்கின்றது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here