யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி!

0
57

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பெண் கடந்த 11ம் திகதி முழங்காவில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும், அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று கடந்த 13ம் திகதி உறுதிப்படுத்தபட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here