இந்த 12 பாவங்களை செய்தால் சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்கவே முடியாதாம்!

0
82

ஒவ்வொரு உயிரின் தலையிலும் அவர்கள் செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் எவ்வளவு பாவங்களை செய்கின்றமோ அதற்கு ஏற்ற தண்டனையும் கிடைக்கும்.

மேலும் மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும். அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

சிவனால் மன்னிக்கவே முடியாத 12 பாவங்கள்
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.

அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது மிகப்பெரிய பாவத்தில் அடங்கும்

உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.

ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.

கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.

இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.

வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.

மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.

முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.

சூரியன் உச்சம் பெற்ற ராசிகள்!… அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான ராசி பலன்கள்

குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, நீங்கள் செய்யும் இந்த பாவச்செயல் கூட ஒரு காரணம்தான்!

சந்திராஷ்டமத்தால் மே மாதம் முழுவதும் காத்திருக்கும் பேராபத்து? இந்த 5 ராசிக்கும் எமகண்டம்…. அலட்சியம் வேண்டாம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here