மர்ம பொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்? அச்சத்தில் மக்கள்! ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு

மன்னார் பேசாலை பகுதியில் உலாவிய மர்ம நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் தேடி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் மன்னாரில் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

பேசாலை பகுதிக்கு நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் ஆலயத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை ஆலயத்தினுல் இருந்த பெண் ஒருவர் அவதானித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் குறித்த பெண் வினவிய போதும் அவருடைய பதில் குறித்த பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண், ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

உதவி பங்குத்தந்தை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை கொடுதோர் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி யளவில் பேசாலை பங்குத்தந்தை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

பேசாலை பொலிஸார், புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சீ.சீ.ரீவி காணொலியை பார்வையிட்டுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தேவாலயத்திலிருந்து வெளியேறி, அருகிலுள்ள விடுதியொன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இரவு தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார்.

எனினும், அவர் புதியவர் மற்றும் விடுதியில் இடமில்லாத காரணங்களினால் விடுதியில் அவருக்கு இடம் வழங்கவில்லை.

இதையடுத்து விடுதியை விட்டு வெளியில் வந்தவர், சிறிதுநேரம் வீதியில் நின்றார். பின்னர் மாயமாகி விட்டார்.

இதனால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பாக பொலிசார், இராணுவம், புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவிரவாக இராணுவம், கடற்படை, புலனாய்வாளர்கள், பொலிசார் என ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிக்கப்பட்டு, பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்ப வழங்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...