மொறட்டுவப் பல்கலையில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் சாவு – பூநகரில் இன்று காலை பரிதாபம்

யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தென்னிலங்கை பயணித்த மொறட்டுவப் பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பூநகரியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மொறட்டுவப் பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் மோகன் ஆகாஷ் என்பவரே உயிரிழந்தார்.

“மாணவன், நண்பர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தென்னிலங்கை நோக்கிப் பயணித்த போது, டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆகாஷ், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். கல்லூரியின் 13, 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளின் தலைவராகப் பதவிவகித்தவர். அத்துடன் மேசைப்பந்தாட்டத்தில் (Table Tennis) தேசிய மட்டத்தில் சாதித்தவராவார். ஆகாஷின் தந்தை மோகன், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியராவார்.

You might also like