யாழ்.இளம் பெண்கள் 11 பேருக்கு கொரோனாத் தொ ற்று! அதி ர்ச் சி யில் குடும்பத்தினர்

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.

குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இன்று மட்டும் 823 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் இன்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர்.

973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.

Related Articles

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.10.2020

மேஷம்: அசுவினி: பணி பற்றிய நல்ல செய்தி வரும். நெருக்கடிகள் அகலும். பரணி: உடன் பிறப்புகள் மறுக்காமல் உதவிகளைச் செய்வர். கார்த்திகை 1: உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணங்கள் நிறைவேறும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். ரோகிணி:...

துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில்...

புங்குடுதீவு முடக்கத்துக்குள் – இன்றும் 300ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அந்தப் பிரதேசத்தில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 945 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம்...

Latest Articles

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொ டூ ர ம்! மூன்று சடலங்கள்! முழுமையான விபரம் வெளியானது

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் கணவர் மன...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும்...