கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்


கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் 75 வயது வயோதிபருக்கும் 68 வயது வயோதிபப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கிளி. பளை மத்தியக் கல்லூரியில் குறித்த பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டிருந்தனர்.ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் திருமணமாகியும் பதிவுத் திருமணம் செய்யப்படாத தம்பதிகளுக்கு பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post