17 வயது சிறுமி சடலமாக மீட்பு : கை, கால்களில் காயம் : சிகரட்டினால் சூடு வைப்பு

17 வயது சிறுமி சடலமாக மீட்பு : கை, கால்களில் காயம் : சிகரட்டினால் சூடு வைப்பு


பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்த 17 வயது யுவதி ஒரு­வரின் சடலம் காயங்­க­ளுடன் நேற்று வெள்ளிக்கி­ழமை காலை மீட்­க­பட்­டுள்­ள­தாக பொக­வந்­த­லாவை பொலிஸார் தெரி­வித்­தனர்.குறித்த யுவதியை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் பொக­வந்­த­லாவை மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு வந்­த­போது உயிரிழந்த நிலையில் சட­ல­மாக கொண்­டு ­வ­ரப்­பட்­ட­தாக பொக­வந்­த­லாவை மாவட்ட வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அதி­காரியொருவர் தெரி­வித்தார்.

உயிரிழந்த யுவதியின் உடல் மற்றும் கால், கை போன்ற பகு­தி­களில் காயங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் சிக­ரட்­டினால் சூடு­வைக்­க­பட்­ட­ காயங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய ­அ­தி­காரி மேலும் தெரி­வித்­துள்ளார்.
Previous Post Next Post