குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.....

குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.....


குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால் குமுதினி படுகொலை தொடர்பாக எழுதப்பட்ட கவிதை நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது..இக்கவிதை நூலினை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டு கவிதை நூலினை வெளியிட்டு வைத்தார்...

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்...என்பது வரலாறு.....

    

 
Previous Post Next Post