வாரம் 3 முறை இத குடிச்சா, சர்க்கரை நோய் மற்றும் அடிவயிற்று கொழுப்பு மாயமாய் மறையும் என தெரியுமா?

வாரம் 3 முறை இத குடிச்சா, சர்க்கரை நோய் மற்றும் அடிவயிற்று கொழுப்பு மாயமாய் மறையும் என தெரியுமா?


உலகில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஹைப்பர் கிளைசீமியா என்னும் உயர் இரத்த சர்க்கரையால் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஒருவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அது கொழுப்புக்களாக உடலில் தேங்க ஆரம்பித்து, உடல் பருமனை உண்டாக்கும். உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் இருந்தால், அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

பொதுவாக சர்க்கரை நோய் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் வருவதால், அவற்றை சரிசெய்து கொண்டு, இரத்த சர்க்கரை அளவையும், உடல் பருமனையும் குறைக்கும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இக்கட்டுரையில் உயர் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: கற்றாழை – 1 கொத்து அன்னாசிப்பழம் – 2 துண்டுகள் செலரி – சிறிது ஆரஞ்சு ஜூஸ – 1 கப் ஆளி விதை – 2 சிறிய ஸ்பூன் பார்ஸ்லி – 1 கையளவு

செய்முறை: கற்றாழை, அன்னாசி போன்றவற்றை நன்கு கழுவி, தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு, அத்துடன் இதர பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் நேரம்: இந்த பானத்தை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பின் குடிக்கலாம். வெளியே நீண்ட நேரம் இந்த பானம் இருந்தால், அது அந்த பானத்தில் உள்ள மருத்துவ குணத்தை இழக்கச் செய்துவிடும். முக்கியமாக இந்த பானத்தை வாரத்திற்கு மூன்று முறை, அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே மிகவும் நல்லது.

நன்மை #1 இந்த பானம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை வேகமாக குறைக்க உதவும்.

நன்மை #2 உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடித்து வருவது மிகவும் நல்லது. இதனால் எடை வேகமாக குறைவதோடு, இரத்த சர்க்கரையும் அதிகமாகாமல் இருக்கும்.

குறிப்பு இந்த பானத்தை குடிக்க ஆரம்பித்தால், நல்ல ஆரோக்கியமான டயட், தினமும் உடற்பயிற்சி மற்றும் 2 லிட்டர் நீரை தவறாமல் குடிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும் வேண்டியது அவசியம்.
Previous Post Next Post