இயற்­கையின் கோரத் தாண்­ட­வத்­துக்கு 44 மாண­வர்கள் பலி

இயற்­கையின் கோரத் தாண்­ட­வத்­துக்கு 44 மாண­வர்கள் பலி


நாட­ளா­விய ரீதியில் நில­விய சீரற்ற கால நிலை கார­ண­மாக ஏற்­பட்ட மழை, மண் சரிவு அனர்த்­தங்­களில் சிக்கி இதுவரை 44 பாட­சாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரத்­தி­ன­பு­ரி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை  ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாண­வர்கள் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இரத்­தி­ன­பு­ரியில் 30 ஆயிரம் மாண­வர்­கள் ­வ­ரையில் பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக ஊவா மாகாண கல்வி திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­துள்ளன.

இதேவேளை, இயற்கை அனர்த்த்தில் சிக்கி இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் 44 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post