சாரதிகள் 75 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

சாரதிகள் 75 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !


மாத்தளை நகரில் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென அடையாளங்காணப்பட்ட 75 வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.மாத்தளை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வாகனங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதில் பாடசாலை சேவையை முன்னெடுக்கும் பஸ் மற்றும் வேன் போன்ற 7 வாகனங்களும் போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென இணங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளதுடன், மேலும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post