விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு


வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார்.

குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையிலே நீதிமன்றின் அனுமதியுடன் நீதிபதி எம்.எஸ்.எம் சம்சுதீனின் முன்னிலையிலையே இந்த அகழ்வுப்பணி நடைபெற்றுள்ளது

குறித்த நபர் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை எனவும் இராணுவத்தரப்பு தெரிவிக்கின்ற நிலையில் குறித்த நபரை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலையே குறித்த அகழ்வு இடம்பெற்றுள்ளது

குறித்த அகழ்வு நடவடிக்கை நேற்றுடன் நான்காவது தடவையாக நடைபெற்றுள்ள போதும் தடயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post