கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!


பள்ளம - அடம்பன பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் தாக்கப்பட்டு, படுகாயமடைந்துள்ள நிலையில் வீதியில் விடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை மீட்ட பொலிஸார் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் படுகாயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சிலாபம் அம்பகல பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவரை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post