அவசர வேண்டுகோள் : மாத்தறை பண்டாத்தார பகுதி மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

அவசர வேண்டுகோள் : மாத்தறை பண்டாத்தார பகுதி மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்


மாத்தறை பண்டாத்தார பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளப் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டுள்ள அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நில்வலா கங்ககையின் நீர்மட்டம் அதிகரிப்பதால் மாத்தறை பிரதேசத்தின் மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டாத்தர, வெலவட்ட, மெதடவத்த, உயன்வத்த மற்றும் நடுகல ஆகிய பிரதேசங்களே அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post