ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு


அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டது. டீஸரில் இடம்பெற்ற Never Ever Give Up என்ற வசனம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் படக்குழு Never Ever Give Up என்ற பெயரில் ஒரு பாடலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்க, கபிலன் வைரமுத்து வரிகளை எழுதியுள்ளாராம்.

இந்த பாடலில் வரும் வரிகள் 25 வருட சினிமா பயணத்தில் அஜித்தின் கடின உழைப்பை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் டிஸரில் வந்த வசனத்தை டிரண்ட் ஆக்க, இதனாலேயே வசனத்தை வைத்து ஒரு பாடலை உருவாக்க படக்குழு முடிவு செய்ய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post