ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு : இருவர் பலி

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில்  துப்பாக்கி சூடு : இருவர் பலி


ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள அச்சகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிக்கடுவ குமாரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய துசார தனுந்தர, 34 வயதுடைய சுஜீத் ஹிமால் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post