வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!

வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!


வெள்ளவத்தை – சாவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் இதுவரையில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் 15 பேர் களுபோவில வைத்தியசாலையில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

 

Previous Post Next Post