புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை

புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை


புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த ட்ரயலட்பார் நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post