தீர்வு வழங்காவிடில் நேரத்திலும் போராட்டம் நடத்துவோம்! எச்சரிக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீர்வு வழங்காவிடில் நேரத்திலும் போராட்டம் நடத்துவோம்! எச்சரிக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி (சைட்டம்) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் முன் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன் அறிவித்தல் எதுவுமின்றி எந்தவொரு நேரத்திலும் போராட்டம் நடத்தப்படும் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களிடம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதில் கடுமையான தீர்மனாங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்த பொறுப்பு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் நிறைவேற்றுக் குழு தீர்மானிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post