யாழ். நுணாவில் சந்தியில் நான்கு வாகனங்கள் மோதி பெரும் விபத்து

யாழ். நுணாவில் சந்தியில் நான்கு வாகனங்கள் மோதி பெரும் விபத்து


நுணாவில் சந்தியில் நேற்று பிற்பகல் 3.05 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இறக்கிக் கொண்டு நின்றது.
இதே வேளை பின்னால் வந்த இராணுவத்தின் வாகனம் அதனை முந்த முற்பட்டு தனியார்  பேருந்துடன் மோதிக் கொண்டு வீதியின் நடுவே சென்றது.அதன் பின்னர் எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் அத்துடன்  முன்னால் வந்த ஹன்டர் வாகனமும் இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிக்கொண்டது.

இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post