பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் யார்?பதற்ற நிலையில் பருத்­தித்­து­றை!

பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் யார்?பதற்ற நிலையில் பருத்­தித்­து­றை!


கர­வெட்டி வடக்­கைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வ­ரின் இறப்­புக்கு மருத்­து­வத் தவறே கார­ணம் என்று குற்­றஞ்­சாட்டி யாழ்ப்­பா­ணத்­தில் பல இடங்­க­ளி­லும் துண்­டுப் பிர­சு­ரங்­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

குறித்த பெண் வலிப்பு கார­ண­மா­கக் கடந்த 9 ஆம் திகதி பருத்­தித்­து­றை­ஆ­தார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். அங்கு வைத்து ஒரு வகை ஊசியை ஏற்­றி­ய­தா­க­வும், இதன் கார­ண­மா­கவே குறித்த பெண்­மணி உயி­ரி­ழந்­த­தா­க­வும் தெரி­வித்து யாழ்ப்­பா­ணத்­தின் பல இடங்­க­ளி­லும் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

கர­வட்­டி­யைச் சேர்ந்த த.மரி­ய­லீலா(வயது-48) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார் என அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Previous Post Next Post