மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!


திவுலிபிட்டிய - உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றுடம் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் 18 வயதுடையவரெனவும், சிறுமி 16 வயதுடையவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய கொள்கலன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post