யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள்

யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள்


பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் வழக்கில் விரைவான நீதி கோரியும் வேண்டுமென்றே காலதாமதம் காட்டப்படுகின்றது.

படுகொலை வழக்கை விரைவுபடுத்தி நீதி வழங்கக் கோரியும் . நாளை காலை 9:00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை போராட்டம் இடம்பெறவுள்ளது.

இப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ் மாவட்ட வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து ஆதரவை தரும்படி பொது அமைப்புகள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பாடசாலை மாணவர்களை காலை 10:30 மணி முதல் 11:30 வரை பாடசாலை வாசலில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னேடுக்கும் படி மக்கள் சக்தியும் பொது அமைப்புக்களும் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post