ஒன்றா இரண்டா, ஒன்பது பேரை கொடுத்து விட்டேனே….முள்ளிவாய்க்காலில் கதறி அழும் தாய்மார்!!

ஒன்றா இரண்டா, ஒன்பது பேரை கொடுத்து விட்டேனே….முள்ளிவாய்க்காலில் கதறி அழும் தாய்மார்!!


“என்ர ஐயா.. என்னை விட்டு சென்று விட்டாயே…” முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்து நிற்கும் உறவினர்களின் ஆதங்கம் இது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது உறவுகளை இழந்த மக்கள் தமது மனக்குமுறல்களை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்.
“என்ர பிள்ளை, என் கடைக்குட்டி பிள்ளை, எங்கே சென்றாயடா??…. அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டிய என் தங்கமே, எங்கே சென்றாய்?
நான் வளர்த்தவனே, என்ர ஐயா… நான் பெற்றவனே.. நான் வளர்த்தவனே… நீ எங்கேயடா???
ஒன்றா இரண்டா, ஒன்பது பேரை கொடுத்து விட்டேனே….
இவ்வாறு பிள்ளைகளை இழந்த தாய்மார், கணவரை இழந்த மனைவிமார், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீர்விட்டழும் காட்சியைப்பார்க்கும் போது அப்பகுதி மக்கள் எத்தனை கஸ்டங்களை சுமந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

Previous Post Next Post