பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்...

பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்...


பாசையூர் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கடலினுள்ளேயே உயிரிழந்துள்ளார்.
குருநகர் பழைய பூங்கா வீதியை சோந்த துரைசிங்கம் ஆரோக்கியராஜா (வயது 60) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
இவர் காலை 9 மணியளவில் மேலும் இரு நபர்களுடன் மீன் பிடிப்பதற்காக ஒரு வள்ளத்தில் குருநகர் கடற்பகுதிக்குள் சென்றுள்ளனர். 2 மயில் தூரம் சென்று கடலில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை இவர் திடீரென் கடலுக்குள் காணமல் போயுள்ளார். அருகில் இருந்தவர்கள் இவரை தேடிய போது சிறு தூரத்தில் இவர் மிதந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
உடனடியாக அவரை கரைக்கு கொண்டு வந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதித்த போது இவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
Previous Post Next Post