கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து..இருவர் உயிரிழப்பு...

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து..இருவர் உயிரிழப்பு...


கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில் புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் ரயிலுடன் மோதியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 2 இளைஞர்கள் பலியானதுடன் மற்றொருவர் படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் புளியங்குளம் பிரதேசத்தைச்சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது-21), ஜெகநாதன்-ரஜிதன்(வயது 20 ஆகியோர் உயிரிழந்தவராவர் இருவரினதும் உடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது    

Previous Post Next Post