பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்...

பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்...


பருத்தித்துறை இறங்கு துறை யானது உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் மீன்பிடி அமைச்சினால்  விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில்.குறித்த இறங்கு துறை  விஸ்தரிப்பின் மூலம் அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 285 மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அதனை நிறுத்தி பருத்துறை இறங்கு துறைக்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தை மட்டும் அபிவிருத்தி செய்யுமாறு கோரி பருத்தித்துறை மீனவ சங்கத்தினரால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.இந்த அமைதி வழி போராட்டம் பருத்துறை முனையிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபவனியாக வந்து நிறைவடைந்தோடு பருத்துறை பிரதேச செயலகரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

    

Previous Post Next Post