தென்மராட்சி நுணாவிலில் விபத்து,.

தென்மராட்சி நுணாவிலில் விபத்து,.


நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.30​
மணியளவில் யாழிலிருந்து வவுனியாவுக்கு பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் சிறிய விபத்துக்குள்ளாகியது.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் சென்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. இதனால் வேலைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பேருந்துகளை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
டிப்பர் வாகனம் நுணாவில் வைரவர் கோவில் சந்தியால் திருப்ப முற்பட்ட வேளையிலேயே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பேருந்தில் சிறிய சேதங்கள் ஏற்பட்டிருந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் பதற்றத்தை தணித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post