யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!

யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!


யாழ்ப்பாணம் காக்கைதீவுப் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டுத் தனமாக கழுவுகளைக் கொண்டுவோரைக் கண்டறியும் வகையில் நேற்று முதல் அப்பகுதியில் கமரா பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாநகர ஆணையாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் காக்கைதீவுப் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டுத் தனமாக கழுவுகளைக் கொண்டுவோரைக் கண்டறியும் வகையில் நேற்று முதல் அப்பகுதியில் கமரா பொருத்தப்பட்டுள்ளது. அதாவது குறித்த பகுதியில் நீண்டகாலமாக திருட்டுத்தனமாக அதிக விலங்கு கழிவுகள் உள்ளிட்ட பெரும் கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து பலரும் கொட்டி வந்தனர்.இவ்வாறு கொட்டுவதனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் ரோந்து நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தினர். இருப்பினும் முழுமையாக தடுக்க முடியவில்லை.்இறுதியாக அண்மையில்கூட ஓர் வாகனத்தில் விலங கு கழிவுகளை ஏற்றி வந்து கொட்டுப்போது கையும் களவுமாக பொலிசாரின் உதவியோடு பிடிக்கப்பட்டிருந்தனர்.

எனவே இவ்வாறான சம்பவங்களை முழுமையாக தடுப்பதற்கான திட்டத்தின் கீழ் தற்போது சீ.சீ.ரி கமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.்இதன் அடிப்படையில் தற்போது காக்கைதீவுப் பகுதியில் நேற்று முதல் குறித்த பகுதிகளில் பல கமராக்கல் பொருத்தப்பட்டுள்ளது.்இதனால் இனிவரும் நாட்களில் இப்பகுதியில் இரவுவேளைகளில் இவ்வாறான கழிவுகளை கொட்டுவோரை கமராமூலம் இனம் கானப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எண்ணியுள்ளோம். என்றார்.
Previous Post Next Post