வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்

வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்




காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100 ஆவது நாள் ஊர்வலத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 'நாம் அமெரிக்காவின் உதவியைக் கோருகிறோம்' என எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் மேற்கொண்டமையால் அவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெறுவதால் தாம் கலந்து கொள்ள வில்லை என மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஊடகவியலாளரிடம் தெரிவிருந்தனர்.
Previous Post Next Post