அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தாயாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தாயாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தயாரான காலஞ்சென்ற எப்பிட்டவத்தை ஆரச்சிலாகே லீலா நோனா அம்மையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள புலத்சிங்கள, போத்தலேகம இல்லத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு  தனது அனுதாபங்களை தெரிவித்தார்.
Previous Post Next Post