லாஸ் ஏஞ்சல்ஸில் பறக்கும் '2.0' ராட்சத பலூன்

லாஸ் ஏஞ்சல்ஸில் பறக்கும் '2.0' ராட்சத பலூன்சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் புரொமோஷன் பணிக்காக அப்படக்குழுவினர் உலகம் சுற்ற தயாராகிவிட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள '2.0' பட புரொமோஷன் நிகழ்ச்சி மூலம் உலகளவில் கவனம் ஈர்க்கும் விதமாக அங்குள்ள ஹாலிவுட் ஸ்டுடியோவில் ரஜினிஅக்ஷய் குமாரின் புகைப்படங்கள் கொண்ட 100 அடி ராட்சத பலூன், விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன.


லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓர் இந்திய படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.


பிம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


லண்டனில் பறக்கவிடப்பட்டுள்ள இந்த ராட்சத பலூனை துபாய், சான் பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் பறக்கவிடவும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இந்த ராட்ச பலூனை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக கருதப்படும் '2.0' முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால்,கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதனால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post