அரசியலில் இறங்கலாமா? அமிதாப்பிடம் ஆலோசனை செய்த ரஜினி

அரசியலில் இறங்கலாமா? அமிதாப்பிடம் ஆலோசனை செய்த ரஜினி
தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஆலோசனை செய்துள்ளார்.  அரசியலில் அடி எடுத்து வைப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பலரிடம் ஆலோசனை செய்து வருகிறார்.

தற்போது அவர் காலா படப்பிடிப்பு முடிந்து அமெரிக்கா சென்றுள்ளார். காலா படப்பிடிப்பிற்காக மும்பையில் அவர் சில நாட்கள் இருந்தார். அப்போது, அவரின் நீண்ட கால நண்பரும், பாலிவுட் நடிகருமான அமிதாப்பச்சனை அவர் சந்தித்து பேசினார்.    1984ம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியில் இணைந்த அமிதாப்,  பாராளுமன்ற தேர்தலில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், போபர்ஸ் ஊழல் வழக்கில் அவரின் பெயர் அடிபட்டதால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தினார்.   இந்நிலையில்தான் ரஜினிகாந்த அவரின் ஆலோசனை செய்துள்ளார். அவருக்கு பல ஆலோசனைகளை அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
Previous Post Next Post