தல நடிக்கும் விவேகம் படத்தின் புதிய அப்டேட்ஸ்

தல நடிக்கும் விவேகம் படத்தின் புதிய அப்டேட்ஸ்
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விவேகம். இதில், அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அவருடன் இணைந்து அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தல, அஜித்துக்கு என்று அவரது 25 ஆண்டு சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும் வகையில், அவருக்கென்று ஒரு தீம் பாடல் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இணையதளத்தில் விவேகம் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரபேற்பைப் பெற்று வருகிறது. அதில், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் விவேகம் உருவாகி வருகிறது. இதில், அஜித், விவேக் என்ற இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால் வெளிநாட்டில் வாழும் இந்திய குடும்ப பெண்ணாக நடிக்கிறார். படத்தில் அஜித்தின் காதலியும் அவர்தான். இவரைத் தொடர்ந்து அக்‌ஷராஹாசன் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டு பெண்ணாக நடிக்கிறார். அஜித்துக்கு உதவும் வகையிலும், ஆக்‌ஷன் சீனிலும் நடித்திருக்கிறார். விவேக் ஓபராய் பாசிட்டிவ் ரோலில் நடித்துள்ளார். என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் பலம் என்பது படம் சொல்ல வருகிற மெசேஜ். இண்டர்நேஷன்ல் ஆக்‌ஷன் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கும், செண்டிமெண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற படம். செர்பியா, பல்கேரியா, குரோஷி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் 97 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. சென்னையில் 3 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது.

பனியிலும், மலையிலும், கரடு முரடான பாதையிலும் பைக் ஓட்டி அசத்தியிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் படத்தை டப் செய்து உலகம் முழுவதும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா – அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்பிருக்கிறது. அது விவேகம் படத்தின் 2ம் பாகமாகக் கூட இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post