கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.

கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.


வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிக்குளபகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுமார் இரண்டாயிரத்து எழுபது குடும்பங்களினை கொண்டுள்ள ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவானது.14 கிராமங்களை உள்ளடக்கிய கிராமமாகும்.எனினும் இந்த கிராம சேவகர் பிரிவில் நிரந்தர கிராம அலுவலர் நியமிக்கப்படாமையினால்.தாம்  கடும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே பதில் கிராம சேவையாளராக கடைமையாற்றிய கிராமஅலுவலரும் தனது கடமையினை சரியாக செய்யாமையினால் அரச அதிபரினால் இடமாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்த ஆசிக்குளபகுதி மக்கள்.


இன்று வரை தமது பிரதேசத்திற்கு புதிய கிராம அலுவலர் நியமிக்கப்படவில்லை எனவும்.தினமும் V 244 கிராமசேவகர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது சேவைகளை பெற செல்கின்ற நிலையில்.அங்கு உரிய அலுவலர் இல்லாமையினால் தாம் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக ஆசிக்குளம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனினும் சமுர்த்தி வேலைத்திட்டங்கள் உரிய தரப்பினரால் வினைத்திறனாக  முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தமக்கள் இதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க ஆவணை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தமது பிரிவில் 16 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எனினும் தற்காலிகமாக வெளிக்குளம் கிராம சேவகரை தற்காலிகமாக நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.எனினும் இன்று வரை பதில் கிராமஉத்தியோகத்தர் கடமையை பொறுப்பேற்கவில்லையென அப்பகுதிமக்கள் எமது இணையத்துக்கு தெரிவித்தனர்.

Previous Post Next Post