காரைநகர் கோவள விளையாட்டுக்கழக மென்பந்து சுற்றுப்போட்டி 2017

காரைநகர் கோவள விளையாட்டுக்கழகம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் 2017ம் ஆண்டிற்கான போட்டிகள்
கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.

இந்த ஆண்டிற்கான போட்டிகள் 10பந்து பரிமாற்றத்தை கொண்டதாக 10 அணிகள் பங்குபற்றியதுடன் அவ் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் இடம் பெற்றது.

அவற்றில் இருந்து கோவளம்A, அம்பாள்,கோவளம்B,ஒளிச்சுடர் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன!!

இறுதிப்போட்டி அம்பாள் விளையாட்டுக்கழகத்திற்கும் கோவளம்A அணிக்கும் இடையில் இடம் பெற்றதுடன் அம்பாள் விளையாட்டுக்கழகம் 33 ஓட்டங்களால் வெற்றியை பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது!

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாள் அணி மயூரனின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 8இலக்குகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்றது. கோவளம் அணி சார்பாக கிருபாகரன் 5 இலக்குகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோவளம் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 62 ஓட்டங்களை பெற்று 33ஓட்டங்களால் கிண்ணத்தை இழந்தது!!
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக அம்பாள் அணியின் மயூரன் தெரிவானதுடன் தொடரில் அதிகூடிய ஓட்டங்களாக 111 ஓட்டங்கள் கோவளம்B அணி வீரர் செந்தூரனால் பெறப்பட்டது.

தொடரில் அதிக இலக்குகளாக 13 இலக்குகளைகோவளம் A அணி வீரர் வராகன் வீழ்த்தியதுடன் 3 ம் இடத்தை ஒளிச்சுடர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.  

    

 

   
Previous Post Next Post