அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் மறவன்புலோ, கைதடி நாவற்குழி, நாவற்குழி ஆகிய கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த பகுதிகளில் காணப்படும் விவசாய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், மற்றும் கிணறுகள் என்பன புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. கைதடி நாவற்குழி தெற்கு கோவிலாக்கண்டி குளம், கைதடி நாவற்குழி கிராய்குளம், மறவன்புலோ கிழக்கு  சவரியன்குண்டு குளம் அதனோடு இணைந்த வாய்க்கால்கள், செம்மன்குண்டு குளம், மறவன்புலோ வடக்கு திரிவிராய்குளம், சின்னத்தூவில் குளம் சட்டநாதர் ஐயா கிணறு உள்ளிட்டவை புனரமைப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழை காலம் நெருங்குவதன் காரணமாக குறித்த குளங்கம் மற்றும் வாய்கால்களை புனரமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், குறித்த பிரதேச கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடந்தவாரம் ஆளுநர் அழைத்து பேசி இருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றயதினம் குறித்த வேலைத்திட்டங்கள் நடைபெறுவதனை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்
Previous Post Next Post