எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்


எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

யாழப்பாணத்திற்கான உத்தியோக விஜயம் மேற்கொள்ளும் ஐனாதிபதி காலை 9 மணிக்கு விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். முதல் நிகழ்வாக
புத்தூர் நிலாவரை கமநலசேவை தினைக்களத்தில் நடைபெறும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்கமாக விதை ப்பொருட்கள் வழங்கி வைப்பதோடு .

இந்து கல்லூரியில் தொழில்நுட்ப மூன்று மாடி கட்டிடம் திறந்து வைக்கவுள்ளார்.பின்னர்

இந்து கல்லூரியில் தேனீர் உபசாரத்தில் கலந்து கொள்ளவுள்ள ஐனாதிபதி

இந்து கல்லூரி யில் தமிழ்மொழித் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

மதியம் 2 மணி கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்தியநிலையத்தினையும் திறந்து வைக்கவுள்ளார்..

தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் பாடசாலைகளின் கலாசார விழாவும் இத்தினங்களில் பிரமாண்டமாக யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் (சனிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்துக் கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கல்வி அமைச்சும், ஐங்கரன் மீடியா சொலுஷன் நிறுவனமும் இணைந்து நடத்தும் விழாவில் 14 ஆம் திகதி முதலாம் நாள் நிகழ்வில் தேசிய தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களால் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவார். தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் மாலை 7 மணி வரையில் நடைபெறும்.

இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறும்.
14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிகழ்வுகளி

ல் சுமார் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பொதுமக்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 
Previous Post Next Post