குமுறல்என்ன நடந்து கொண்டிடுக்கிறது எம் சமூகத்துக்கு,,,,,சமூகத்துக்கு கருத்துக்கூற நான் யோக்கியாமா? என்பதற்கப்பால் சமூகத்தின் மீது விருப்பு கொண்டவனாகவும் வெறுப்பு கொண்டவனாகவும் எதையோ உதிர்த்துவிட முனைகிறது மனது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த்த நாள் கொண்டாட கடலில் சென்று பிறந்த்த நாளை இறந்த்த நாளாக பிரகடனப்படுத்தியவனையும் மற்றைய தம்பிகளை நினைக்கவும் மனம் அமுக்கம் தாங்காது வெடிக்க விளைகிறது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை முதலில் என் தம்பிகளின் ஆத்துமா சாந்தியடைய பிரார்த்தித்து நகருகிறேன்.

இத்தகையா நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்
1.பெற்றோர்
2.ஆசிரியர்கள்
3.உறவினர்கள்
4.பாடசாலை சமூகம்
5. சமூகம்
6.புத்திஜீவிகள்
7.சமூக ஆர்வலர்கள்
8.சட்டம் பேசும் வல்லுனர்கள்

என எல்லோருமே பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
அதாவது ஒரு தசாப்த காலத்துக்கு முன் கூட இவ்வாறான நிகழ்வுகள் நடந்தேறவில்லை...சாவுகள் நடந்தேறின அனால் காரண கர்த்தவோடு ஆனால் எமனுக்கு ஆடம்பர பரிசாக பறிகொடுக்கவில்லை இது போன்று........

முன்னரெல்லாம் நாம் வீ ட்டில் பெரியவர்களை மதிக்கவில்லை என்றால் ஓட ஒட அடி விழும்,
நல்ல ஞாபகம் எனக்கு தரம் 10 படிக்கையில் மாபிள் விளையாடும் போது ஒரு அண்ணாவை தரக்குறைவாக பேசியதை அவதானித்த என் அப்பா வயலுக்கு தண்ணீர் இறைக்கும் வோட்டர்பம்ப் ஷ்ராற் பண்ணுகுற கயித்தினால் நான் ஓட ஓட என்னை ஊருக்குள் கலைத்து களைத்து அடித்தார். அது அப்போது வலித்தது இப்போது இனிக்கிறது.

மாலை 6.00 மணியென்றால் லாம்பு களுக்கு எண்ணை விட்டு சிமிலிகள் துடைத்து மண்ணெண்ணை விட்டு படிக்க அமர வேண்டும். இடையில் தூங்கி விளுந்தால் முதுகில் விழும் .

வெள்ளியென்றால் தேவரம் பாடமாகிக்கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் ஊர் அண்ணாமார் அடிப்பாங்கள்.

ரியூசனுக்கு போகவில்லை யெண்டால் வாத்தி அடிக்கும் ,
பாடசாலையில் குளப்படி என்றால் வாத்தியார் அடிச்சு, பிறகு பகுத்தித் தலைவர் அடிச்சு, பிறகு அதிபர் அடிக்க என் தண்டனைகள் நிறைவேற்றத்துக்கு வரும் , அதோடு பாரதூர குழப்படிகள் என்றால் வீட்டுக்கும் பாரப்படுத்தப்பட தண்டனைகள் அதியுச்சமாகும்.

இவ்வாறு பல சம்பவங்களை
அடிக்கிக்கொண்டே போகலாம். *அப்போது மின்சாரம் இல்லை வெளிச்சம் வாழ்க்கக்கு அதிகமாக‌ கிடைத்தது
*அப்போது வசதி வாய்ப்புக்கள் குறைவாய் இருந்தது வாழ்க்கை நண்றாய் இருந்தது.
*அப்போது பணங்கள் அதிகமாய் இல்லை அனால் மனங்கள் நிறந்த்திருந்தது
*அப்போது கட்டடங்கள் அதிகமாயில்லை ஆனால் மனம் கல்லாயிருக்கவில்லை
*அப்போது அப்பா அம்மா அப்பா அம்மா வாகவே இருந்தார்கள்
இப்பாது............
* அப்போது வாத்தி கையில் பிரம்பிருந்தது இப்பாது மனித உரிமை கவுண்சிலில் வழக்கிருக்குது
*அப்பாது மாணவர்களை ஆசிரியர்கள் தண்டித்தார்கள் இப்போது ஆசிரியர்களை மாணவர்கள் தன்டிக்கிறார்கள்.
*அப்போது நாட்டில் சண்டை நடந்த்தது மனதில் சமாதானம் இருந்த்தது
*அப்போது கணவன் மட்டுமே வேலைக்கு போனார்கள் குடும்பத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு குறைவேயில்லை , பணச்சுமை வரவேயில்லை, இப்போது இருவரும் வேலைக்கு போகிறார்கள்........ஆனால்.?
* அப்போது சட்டங்கள் இருந்தன மக்களை நல்வழிப்படுத்த இப்போது சட்டங்கள் இருக்கின்றன ந்ல்வழிப்படுத்துவோரை ஒரு வழிப்படுத்த.
* அப்போது கோவில்கள் இருந்தன சமய ச்மூகத்துக்காக இப்போது பணம் விளைவிக்கும் கொள்ளயடிக்கும் தொழிற்ச்சாலையாக..
*அப்போதும் போதை கள் இங்கிருந்தன அதை நுகர நுகர்வோர் மட்டுப்படுத்தப்தப்படிடுந்தன..இப்போது ஊருக்கு பாடசாலைகள் இருக்கிறதோ இல்லையோ ஊருக்கு 2 மதுபான சாலைகள் உள்ளன..விலைகட்டுப்பட்டும் இல்லை நுகர்வோர் கட்டுப்பாடுமில்லை.
*அப்போதும் குடிகாரர்கள் இருந்தார்கள் குடிகாரர்களிடம் மாணவர்கள் அடிவாங்கினார்கள். இப்போது மாணவக்குடிகாரர்களிடம் குடிமக்கள் அடி வாங்குகிறார்கள்.
*அப்போதும் திருவிழாக்கள், கச்சேரிகள், பார்டிகள் நடைபெற்றன தான் அளவோடு இப்போது பார்டி என்றாலே மதுபானப் பாவனையாகிவிட்டது..

இவ்வாறு எனது கட்டிக்காக்கப்பட்ட நல்ல தேசமொன்று கண்முன் நாசமாய் போவதை ஜீரணிக்க முடியாதவனாக நான் மட்டுமல்ல்ல குடாவின் ஒவ்வொறு குடிமகனும் கடந்த்து போகிறான்.

பெற்றோரே ....
1.மகனுக்கு கல்வியைக் கொடு ,, கல்விக்காக காசை கண்ட‌படி இறைக்காதே இளமையிலும் கல்வியிலும் கொஞ்சம் வறுமை காட்டு,
நீங்கள் பணக்கார குடும்பமாக இருக்கலாம் செயற்க்கை வறுமை காட்டு,
அவ்வையார் சொன்னார் "கொடிது கொடிது இளமையில் வறுமை" அது சரி அவர் சொன்னது உழைத்து குடும்பம் பார்க்க எண்ணும் இளைஞனுக்கு இளமையில் வறுமை கொடிது...ஆனால் நமது குடா நாட்டு பெற்றோர் சும்மா சுத்தி திரியும் பிள்ளைகளுக்கு வாரி இறைகிறார்கள், படிப்பவனுக்கு எதற்ற்கு மோட்டார் சயிக்கிள்?, வேட்டில் மோட்டார் சயிக்கில் இருக்கட்டும் மகனை சயிக்கிளில் அனுப்பு..படிக்க .
இப்போது என் சமூகத்துக்கு அவ்வையாரின் வாக்கு பொய்து போகிறது.. இளமையில் வறுமை காட்டு உன் குளந்தைகளுக்கு.
இப்பாது தாய் தகப்பன் எல்லாரும் பிள்லைகளை பாடசாலைக்கு வகுப்புக்கு பிரத்தியேக வகுப்புக்கு என காவிச்செல்கிறார்கள் அனால் எல்லோருமே சிறந்த சித்தியை பெறுகிறார்களா? இல்லை

ஒரு கதை .. நடிகர் ஜாக்கிசான் அவர்கள் தன் சொத்து என்லாவற்றயும் வறைய மாணவர்களுக்கு எழுதி வைத்துவிட்டார், ஏனென்றால் நான் கஷ்ரப்பட்டு முன்னுக்கு வந்த மாதிரியே என் மகனும் வளரட்டும் , அவனுக்கு வாழ்கையின் கஷ்ரங்கள் புரியட்டும் என் பணத்தில் அவன் ஊதாரியாக வேண்டாம் என்றார்.

ஆனால் என் சமூகமோ ஓடுகிறது ஓடி ஓடி உழைகிறது சொத்து சேர்கிறது நகை சேர்கிறது அதை தான் அனுபவிக்காமல் சேர்த்து சேர்த்து மக‌ளுக்கு சீதனமாக கொடுக்க அச்சொத்து மேலும் திரளுகையடந்த்து அவர்களும் சேர்கிறார்கள்..இதனால் சொத்து திரளலைந்து கொண்டு போகிறதே தவிர அது நம் நாட்டின் பொறுளாதார வளர்ச்சிக்கு எந்த வகிபாங்கினையும் ஏற்றப்டுத்துவதில்லை.

என் சமூகம் எங்க்கு போகிறது ஓடுகிறது என எனக்கு புரியாத வியப்பாக இருப்பது போலத்தான் உங்களுக்கும் இருக்கும்.

என் தம்பிமார்களின் இறப்புக்கு மனக்குமிறலோடு என் சமூகத்தின் மேல் கொண்ட குமுறலையும் வெளிப்படுத்த முனைந்தேன்..ஏதும் தவ்று பேசியிருந்தால் மன்னிக்கவும்//

முன்னைய என்பதிவு
படிப்பதற்கும், கலை பயில்வதற்கும் ஒழுக்க்ம் போதிப்பதற்கும் தந்தையும், குருவும் தண்டிப்பதை எப்போது மனித உரிமை மீறல் என்று நம்மவர்கள் கூவ‌ தொடங்கினார்களோ அன்றிலிருந்து எல்லாம் தலை கீழ்//

நன்றி
கு.மதுசுதன்
Previous Post Next Post