சிறந்த சங்கங்களில் இம் முறையும் அச்சுவேலி பணைவள அபிவிருத்தி சங்கம் முதலாமிடம்

யாழ்மாவட்ட கூட்டுறவு திணைக்களங்களினால் புள்ளிக்கணிப்பீட்டின் அடிப்படையில் அச்சுவேலி பணை, தெணை வள அபிவிருத்தி சங்கம் இம் முறையும் முதலாவது இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாகவும், அச்சுவேலி பணை தென்னை அபிவிரு;தி சங்கம் இடம்பிடித்திருந்த நிலையில் இவ் வருடம் நான்காவது முறையாகவும், முதலாவது இடத்தினை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தினை கோண்டாவில் சங்கமும், மூன்றாவது இடத்தினை பண்டத்தரிப்பு அபிவிருத்தி சங்கம் பிடித்துள்ளது. ஆயிரம் புள்ளிகள் என்ற அடிப்படையில் புள்ளியிடப்பட்டு தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அச்சுவேலி அபிவிருத்தி சங்கம் பந்தல்வாடகை சேவையினை மேற்கொள்ளல், முன்பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்குதல், ஊழியர்கள் மற்றும் சீவல் தொழிலாளர்களுக்கு பொங்கல் பொதி வழங்குதல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வருடம் சங்கத்தினால் இலவச கண்பரிசோதணை முகாம் ஒன்றினையும் நடத்தியிருந்தார்கள். இவ்வாறான பொதுச்செயற்பாடுகளே முன்னிலையில் வருவதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
Previous Post Next Post