அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம்

ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.
கைதான மூவரும் சாவல்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த 16 மற்றும் 17வயதுடைய நபர்கள் எனவும் வல்லிபுரக்கோயில் பகுதியில் கற்பூரம் விற்பனை செய்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கடந்த மாதம் குறித்த பாடசாலையின் அலுவலகத்தினை உடைத்த திருடர்கள் அங்கிருந்து 1இலட்சம் ரூபா பெறுமதியான 32′ தொலைக்காட்சி பெட்டிஇ பாடல் ஒலிபரப்பும் பெட்டிகள் மற்றும் கைபேசிகள் திருட்டு போயிருந்தது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ்பரிசோதகர் பந்துசேன தலைமையிலானகுழுவினர். சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். கைதான சிறுவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post