மருத்துவ தவறுகள் காரணமாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

மருத்துவ தவறகளால் நிகழும் தேவையற்ற மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் நடைபெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மருத்துவ நிலையங்களுக்கு வருகின்ற ஏழை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மருத்துவ தவறுகள் காரணமாக அநியாய மரணங்கள் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்திய பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ தவறுகள் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

பொதுச் செயலாளரும் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரியுமான மு.உதயசிறி வலியுறுத்தியுள்ளார்.    
Previous Post Next Post