எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதி..

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதிய விபத்துக் குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3:00 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய அமிர்தலிங்கம் சிவானந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post