சந்திரிகா – ஐ.நா. செயலாளர் சந்திப்பு

சந்திரிகா – ஐ.நா. செயலாளர் சந்திப்பு


முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ரெஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்றதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் நல்லிணக்கத்துக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post